வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (14:55 IST)

ரஜினியின் பாபா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டம்!

baba-rajini
ரஜினியின் பாபா திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி  தற்போது, நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின், கன்ன சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வரும் நிலையில், இப்படத்தின்  வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்ற படம் பாபா.

இப்படத்தை பாட்ஷா, வீரா படங்களை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியே இப்படத்தை தயரித்திருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தை மீண்டும் வெளிய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இப்படத்திற்கு ரீ எடிட்டி, ரீமிக்ஸ் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படு என்ற தகவல் வெளியாகிறது.

இதனால், ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Sinoj