1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (15:45 IST)

துல்கர் சல்மான் படத்தின் முதல் டிக்கெட் வாங்கிய பாகுபலி ஹீரோ!

prabhas
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள சீதாராமம் படத்தின் முதல் டிக்கெட்டை  'பாகுபலி' பட ஹீரோ வாங்கியுள்ளார்..

மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனும் நடிகருமான துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் வாயை மூடி பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்கள் வெளியானது.

இப்படங்களைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது துல்கர் சல்மானின் சீதா ராமம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கருடன் ராஷ்மிகா மந்தனா, மிருனாள் தாகுர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சில நாட்களான இப்படத்தின் புரோமோசன் நிகழ்ச்சி நடந்து வரும் நிலையில், ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாகுபகு ஹீரோ பிரபாஸ்ல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அப்போது, அவர், சீதாராமம் படத்தின் முதல் டிக்கெட்டை ரூ.100 கொடுத்து பெற்றுக் கொண்டார்.


நாட்டிலுள்ள அழகான நடிகர்களில் துல்கர் சல்மானும் ஒருவர். அவர் நடிப்ப்பில் வெளியான மகா நடி அருமையான படம். அவ்ர் பெரிய  நடிகர். துல்கர் சல்மான் நடித்துள்ள சீதாராமம் படத்தைப் பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.