1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2024 (07:01 IST)

அயலான் படத்தின் மீது ஷாருக் கான் நிறுவனம் வழக்கு… பஞ்சாயத்து என்ன?

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்த கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம். இந்த படம் சுமார் 75 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த படத்தின் மீதான கடன் மற்றும் அதிக பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளருக்கு லாபமில்லை என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும் இன்னும் தங்கள் பங்குத்தொகை வந்து சேரவில்லையாம்.

அதற்குக் காரணம் ஷாருக் கான் நடத்தி வரும் ரெட் சில்லிஸ் எனும் நிறுவனம்தான் என சொல்லப்படுகிறது. அயலான் படத்துக்கு கலர் கரெக்‌ஷன் பணிகள் ரெட் சில்லீஸ் நிறுவனத்தில்தான் நடந்துள்ளது. ஆனால் அவர்களுக்கு தரவேண்டிய பணத்தை இன்னும் அயலான் திரைப்பட தயாரிப்பாளர் தரவில்லையாம். அதனால் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் மூலமாக வந்த வருவாயை தங்களுக்கு தரவேண்டும் என அந்நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.