திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 7 மார்ச் 2024 (10:22 IST)

அயலான் விநியோகஸ்தர்கள் ஏமாற்றம்… பின்னணி என்ன?

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்த கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம். இந்த படம் சுமார் 75 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த படத்தின் மீதான கடன் மற்றும் அதிக பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளருக்கு லாபமில்லை என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும் இன்னும் தங்கள் பங்குத்தொகை வந்து சேரவில்லையாம்.

அதற்குக் காரணம் இந்த படத்தின் மீது கடன் கொடுத்த ஒருவர் நீதிமன்றத்தில் படத்தின் வருவாயை தனது கடனுக்கு பதில் தரவேண்டும் என வழக்கு தொடுத்ததுள்ளார். அதனால் இந்த பிரச்சனை தீரும் வரை விநியோகஸ்தர்களுக்கு சென்று சேரவேண்டிய பணம் சேராது என சொல்லப்படுகிறது. இது அந்த படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது என தகவல்கள் பரவி வருகின்றன.