ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (10:15 IST)

பொன்னியின் செல்வனோடு மோதுகிறாரா சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று  கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது செப்டம்பர் 30 ஆம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேன் இந்தியா திரைப்படமாக இந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையில் இந்த படம் வெளியாகும் நிலையில் அதே தேதியில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படமும் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சயின்ஸ் பிக்‌ஷன் கதையாக உருவாகி வரும் அயலான் திரைப்படம் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் உள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் இப்போது நடந்து வரும் நிலையில் ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி இந்த படத்தையும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலிஸ் செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.