ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (10:51 IST)

உதயநிதி நடிப்பில் உருவாகும் “மாமன்னன்”! – முதன்முறையாக இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்திற்கு மாமன்னன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழில் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். இந்நிலையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கிறார். இந்த புதிய படத்திற்கு “மாமன்னன்” என தலைப்பிடப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட காலம் கழித்து நடிக்கிறார். மேலும் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். முதன்முறையாக உதயநிதி படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணிக்குமே இது முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.