1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (10:42 IST)

ரஹ்மான் ஸ்டுடியோவில் இளையராஜா… இணையத்தைக் கலக்கும் புகைப்படம்!

இசைஞாணி இளையராஜா தன்னோடு இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ரஹ்மான்.

தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் வரிசையில் இரு பெரும் சாதனையாளர்களாக இருப்பவர் இளையராஜாவும், ஏ ஆர் ரஹ்மானும். ரஹ்மான் தன்னுடைய ஆரம்ப காலங்களில் இளையராஜா படங்களில் பல பாடல்களுக்கு வாசித்திருக்கிறார். உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திவரும் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வது அரிய நிகழ்வு.

இப்போது அப்படியான சந்திப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது. இளையராஜா துபாயில் இருக்கும் ரஹ்மானின் பிராதாஸ் ஸ்டியோவுக்கு வருகை தந்துள்ளார். அங்கு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார் ரஹ்மான். அந்த புகைப்படத்தோடு ‘இசைஞானி இளையராஜா அவர்களை எங்களின் பிராதஸ் ஸ்டுடியோவுக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி. அவர் எங்களுக்காக ஏதாவது ஒரு இசையை வாசிப்பார் என்று நம்புகிறோம். பின்னாளில் எங்கள் ஸ்டுடியோவின் சேகரிப்பில் இடம்பெறுவதற்காக’ என கூறியுள்ளார்.