அட்டகாசமான "அயலான்" அப்டேட் - பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி இதோ!
சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அயலான் படத்தின் படப்பிடிப்பு வேகமெடுத்துள்ளது. வேற்றுகிரக மனிதர்களை கொண்ட இத்திரைப்படத்தை ரவிக்குமார் இயக்குகிறார். ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தை 24AM Studios நிறுவனம் தயாரிக்கிறது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. சமீபத்தில் இப்படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. அண்மையில் வெளிவந்த இப்படத்தின் டைட்டில் டீசர் சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வருகிற 17ம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் தினத்தை முன்னியிட்டு அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதை அறிந்த எஸ்கே ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.