திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (11:58 IST)

சிவகார்த்திகேயன் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்!

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்திசிங் நடிப்பில் ’இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த சயின்ஸ் பிக்சன் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு பின்னர் மீண்டும் சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதுவரை இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோஸ் மட்டும் தயாரித்து வந்த நிலையில் தற்போது கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த படம் விரைவில் முடிவடைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட விற்பதாகவும் ஏஆர் கேஜேஆர் தனது டுவிட்டரில் இந்த படத்தின் டைட்டிலை அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து இந்த படத்தின் பணிகள் ஜரூராக நடைபெற்று முடிந்து விரைவில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது