புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (16:56 IST)

உடனடியாக இரத்தம் தேவை: இயக்குனர் அட்லியின் டுவிட்டால் பரபரப்பு!

இயக்குநர் அட்லியின் டுவிட்டர் பக்கத்தில் உடனடியாக ’பி’ குரூப் ரத்தம் தேவை என வெளிவந்த விளம்பரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனர் ஒருவரின் தந்தை வேணு என்பவருக்கு 68 வயது ஆகிறது. இவருக்கு சர்ஜரி ஒன்று செய்யப்படுவதை அடுத்து பி குரூப் ரத்தம் என்றும் அதனால் விருப்பமுள்ளவர்கள் கொடுத்து உதவி செய்யுமாறும் அட்லி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? எந்த எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்? என்பதையும் குறிப்பிட்டு தனது உதவி இயக்குநரின் தந்தையார் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விபரத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
இதனை அடுத்து பல ரசிகர்கள் ரத்ததானம் செய்ய முன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த ட்விட்டர் தற்போது வைரலாகி வருகிறது