எனக்கு கொரோனா இல்லை, வெறும் உடம்பு வலி மட்டும் தான்: ராதிகா விளக்கம்

radhika sarathkumar
எனக்கு கொரோனா இல்லை, வெறும் உடம்பு வலி மட்டும் தான்
siva| Last Modified வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (07:34 IST)
பிரபல நடிகையும் சரத்குமாரின் மனைவியுமான ராதிகாவுக்கு கொரோனா பாதிப்பு என தகவல்கள் வெளிவந்தது. அவர் மீதான செக் மோசடி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கூட அவர் ஆஜராகவில்லை என்பதும் அவருக்கு கொரோனா பாதிப்பால் ஆஜராகவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் சற்று முன் ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா இல்லை என்றும் சாதாரண உடம்பு வலி தான் என்றும் ஆனால் மீடியாக்களில் எனக்கு கொரோனா என்றும் உடல் நலக்கோளாறு என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது என்றும் அது முழுக்க முழுக்க தவறான தகவல் என்றும் தெரிவித்துள்ளார்

தான் சமீபத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து தனது உடம்பு வலி மட்டுமே இருந்தது என்றும் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ராதிகா கூறியுள்ளார். மேலும் நாங்கள் நீதிமன்றத்தில் போராடி வருகின்றொம் என்று கூறிய ராதிகா மீண்டும் தனது வழக்கமான பணிகளை தொடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதிலிருந்து ராதிகாவுக்கு வரும் என்ற தகவல் பொய்யானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
இதில் மேலும் படிக்கவும் :