1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (10:21 IST)

பூனேயில் ஷாருக் கான் மற்றும் நயன்தாரா காட்சிகள்! அட்லி பட ஷூட்டிங் அப்டேட்!

முதலில் துபாயில் நடப்பதாக இருந்த முதல் கட்ட படப்பிடிப்பு பின்னர் மும்பைக்கு மாற்றப்பட்டு இப்போது பூனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஷாருக்கான் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு நாயகி இணைந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒரு வேடத்தில் நடிக்கும் ஷாருக்கானுக்கு நயன்தாரா ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை மிகப் பிரம்மாண்டமாக உருவாக்க தயாரிப்பாளரான ஷாருக் கான் முடிவு செய்துள்ளார். இந்த படத்தை சுமார் 200 கோடி ரூபாய் தயாரிப்பில் உருவாக்க உள்ளாராம். இந்நிலையில் இந்த படத்தில் டங்கல் படத்தில் நடித்த நடிகை சான்யா மல்ஹோத்ரா மற்றொரு கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

முதலில் இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் ஆரம்பிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர் மும்பைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இப்போது மும்பையில் இருந்து பூனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் தொடங்கும் படப்பிடிப்பில் நயன்தாரா மற்றும் ஷாருக் கான் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.