1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (16:17 IST)

அட்லி படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி!

அட்லி ஷாருக்கானை வைத்து இந்தி படம் ஒன்று இயக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

ஷாருக்கான் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு நாயகி இணைந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒரு வேடத்தில் நடிக்கும் ஷாருக்கானுக்கு நயன்தாரா ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை மிகப் பிரம்மாண்டமாக உருவாக்க தயாரிப்பாளரான ஷாருக் கான் முடிவு செய்துள்ளார். இந்த படத்தை சுமார் 200 கோடி ரூபாய் தயாரிப்பில் உருவாக்க உள்ளாராம். இந்நிலையில் இந்த படத்தில் டங்கல் படத்தில் நடித்த நடிகை சான்யா மல்ஹோத்ரா மற்றொரு கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.