விஜய் 67 அந்த இயக்குனருக்குதானாம்… தயாரிப்பாளர்தான் பாவம்!
நடிகர் விஜய் இப்போது தன்னுடைய 65 ஆவது படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் படங்களின் மார்க்கெட் இப்போது விரிவாகிக் கொண்டே செல்கிறது. வசூல் மன்னனாக மாறியுள்ள அவரின் படங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் வசூலை வாரிக் குவிக்கின்றன. இதனால் அவரின் 66 ஆவது படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாக்க உள்ளனர். வம்சி அந்த படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில் இப்போது தன்னுடைய 67 ஆவது படத்தை இயக்கும் இயக்குனரையும் விஜய் உறுதி செய்துவிட்டாராம். தனக்கு மூன்று மிகப்பெரிய ஹிட் படங்களைக் கொடுத்த அட்லிக்குதான் அந்த வாய்ப்பு சென்றுள்ளதாம். அட்லி ஷாருக் கான் படத்தை இயக்கி முடித்ததும் இந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.