செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (16:33 IST)

’அசுரன்’ தெலுங்கு ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

’அசுரன்’ தெலுங்கு ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் கடந்த 219ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தனுசுக்கும் இயக்குனர் வெற்றிமாறனுக்கும் வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ’அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் கடந்த சில மாதங்களாக உருவாகி வருகிறது. தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
‘நாரப்பா’ என்ற டைட்டில் வைத்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘நாரப்பா’ திரைப்படம் வரும் மே மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று போஸ்டருடன் கூடிய அறிவிப்பை அடுத்து வெங்கடேஷ் ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர் 
 
தமிழைப்போலவே தெலுங்கிலும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தமிழில் தயாரித்த கலைபுலி எஸ் தாணு அவர்கள் தான் தெலுங்கிலும் இந்தப் படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது