1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (19:32 IST)

சூர்யா படத்திற்கு கிடைத்த சர்வதேச கெளரவம்!

தனுஷின் அசுரன் திரைப்படம் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் திரையிட அனுமதி பெற்றுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படமும் அதே கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் திரையிட அனுமதி பெற்றுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த சூரரைப்போற்று திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது
 
பொதுவாக ஓடிடியில் வெளியான படங்கள் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள அனுமதி கிடையாது. ஆனால் தற்போதைய கொரொனா வைரஸ் காலத்தை கணக்கில் கொண்டு ஓடிடியில் வெளியாகும் திரைப்படத்தையும் விருது போட்டியில் அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து கோல்டன் குளோப் விழாவில் பங்கு பெறும் முதல் ஓடிடியில் திரைப்படம் சூரரைப்போற்று என்பது குறிப்பிடத்தக்கது 

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் தனுஷின் அசுரன் ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது