செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 டிசம்பர் 2020 (10:42 IST)

தனுஷுக்கு அசுரன்… விஜய்க்கு கில்லி… சூர்யாவுக்கு – வாக்கெடுப்பில் சூர்யாவை வெற்றி பெற வைத்த ரசிகர்கள்!

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தை மிகவும் தேடப்படும் திரைப்படமாக ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர்.

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலிஸானது. அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் சூர்யாவின் திரை வாழ்க்கையில் அயன் திரைப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக மாறியுள்ளது.

இந்நிலையில் ராம்சினிமாஸ் நடத்திய வாக்குக் கணிப்பு ஒன்றில் சூரரைப் போற்று திரைப்படத்தை முதலிடம் பிடித்துள்ளது. இது சம்மந்தமாக வாக்கெடுப்பில் சூரரைப் போற்று திரைப்படத்துக்கு  பிறகு விஜய்யின் கில்லி திரைப்படமும் மூன்றாம் இடத்தில் தனுஷின் அசுரன் திரைப்படமும், இடம்பெற்றுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.