திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2021 (17:37 IST)

நீ அசுரன் என்றால் நான் ஈஸ்வரன்: டிரைலரில் தனுஷை வம்புக்கு இழுத்த சிம்பு!

எம்ஜிஆர் சிவாஜி, கமல்ஹாசன் ரஜினிகாந்த், அஜீத் விஜய் போல் சினிமாவில் போட்டியாளர்கள் என்று தனுஷ் சிம்புவை கூறலாம். இருவரும் கடந்த பல ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் போட்டியாளர்களாக இருந்துவரும் நிலையில் இன்று சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளிவந்துள்ளது
 
இந்த டிரைலரில் ’நீ அழிப்பதற்கு வந்த அசுரன் என்றால் நான் காப்பதற்கு வந்த ஈஸ்வரன்’ என்று சிம்பு ஆவேசமாக வசனம் பேசும் ஒரு காட்சி உள்ளது. இந்த காட்சி தனுஷ் ரசிகர்களை வம்புக்கு இழுப்பதற்காக வேண்டுமென்றே இடம்பெற்றிருப்பதாக ரசிகர்கள் இடையே வாக்குவாதம் நடைபெற்று வருவதால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அந்த படத்தை விட அதிகபட்சமான வெற்றியை ஈஸ்வரன் பெறும் என்ற வகையில் சிம்பு இந்த வசனத்தை வைத்து இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஆனால் படக்குழுவினர்களிடம் இருந்து வந்த தகவலின்படி தனுஷ் படத்தை அவமதிக்கும் வகையில் இந்த வசனம் இல்லை என்றும் கதைக்கு தேவைப்பட்டதால் தான் இந்த வசனம் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
கீழே உள்ள டிரைலரை பார்த்து சிம்பு உண்மையிலேயே தனுஷை வம்புக்கு இழுப்பதற்காகத்தான் இந்த வசனத்தை வைத்தாரா? இல்லையா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்