அடிச்சு தூக்கிய அசுரன் - தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா...?

Papiksha| Last Updated: சனி, 12 அக்டோபர் 2019 (17:22 IST)
வடசென்னை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் வெளிவந்து வெற்றிநடை போட்டு வரும் படம் அசுரன். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகிய இத்திரைப்படம் கடந்த 4ம் தேதி வெளிவந்தது. 


 
படம் வெளியான முதல் நாளிலிருந்தே பாராட்டு மழையில் நனைந்து வரும் அசுரன் . விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது. சிவ சுவாமி கதாபத்திரத்தில் தனுஷின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 
 
இந்நிலையில் அசுரன் படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் ஆர்ச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. திரையரங்கில் இப்படியே படம் ஓடினாள் விஐபி படத்தின் வசூலை அசுரன் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :