போலிஸ் மாணவர்கள் அடிமையா? பரபரப்பான டாணாக்காரன் டிரைலர்!

Last Modified சனி, 17 ஜூலை 2021 (10:19 IST)

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள டாணாக்காரன் திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும் இளைய திலகம் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கடந்த 2012 ஆம் ஆண்டு கும்கி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் ’இவன் வேற மாதிரி’ ’அரிமா நம்பி’ ’சிகரம் தொடு’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த அவர் தற்போது ’புலிக்குட்டி பாண்டியன்’ ’பொன்னியின் செல்வன்’ ’பாயுமொளி நீ எனக்கு ’ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விக்ரம் பிரபு நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘டாணாக்காரன்’. இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் நேற்று அதன் டீசர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. டீசரில் போலிஸ் பயிற்சி பள்ளிகளில் நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விக்ரம் பிரபு மோதும் படமாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :