திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 நவம்பர் 2017 (11:20 IST)

கஜினிகாந்த் ஆக மாறும் ஆர்யா

நடிகர் ஆர்யாவால் ரஜினிகாந்த் அளவுக்கு பெரிய நடிகராக மாற முடியாவிட்டாலும் அதற்கு பதிலாக 'கஜினிகாந்த்' ஆக மாற முடிவு செய்துவிட்டார். ஆம், ஆர்யாவின் அடுத்த பட டைட்டில் 'கஜினிகாந்த்' என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை சந்தோஷ் ஜெயகுமார் இயக்கவுள்ளார். இவர் சமீபத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்த 'ஹரஹர மகாதேவகி' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படமும் முந்தைய படம் போலவே காமெடி மற்றும் அடல்ட்ஸ் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருவதாக இயக்குனர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.