ஆர்யாவின் கல்யாண அறிவிப்பு பொய்யா?
ஆர்யாவின் கல்யாண அறிவிப்பு பொய்யாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
‘தன் திருமணத்துக்குப் பெண் பார்ப்பதாகவும், யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்’ என்றும் ஒரு மொபைல் நம்பரை வெளியிட்டுள்ளார் ஆர்யா.
‘இது பொய்யான விஷயம் கிடையாது, என் வாழ்க்கை சம்பந்தப்பட்டது’ என்றும் ஆர்யா கூறியிருந்ததால், நிஜமாகவே உண்மையாகவே இருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
ஆனால், இது டிவி நிகழ்ச்சிக்கான அறிவிப்பு என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். ‘பிக் பாஸ்’ போல பாலிவுட்டில் நடைபெற்ற ஒரு ரியாலிட்டி ஷோவை, தமிழுக்கு கொண்டு வருகிறார்கள். ‘சுயம்வரா’ என்ற பெயரில் நடந்த ஷோவில், வெற்றியாளரை செலிபிரிட்டி கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம்.
முதல் எபிசோடில் கூட வெற்றியாளருக்கும், நடிகை ராக்கி சாவந்துக்கும் திருமணம் நிச்சயமாகி, பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். அந்த ரியாலிட்டி ஷோ தான் தமிழில் வரப்போகிறது என்கிறார்கள். ராக்கி சாவந்த் போல ஆர்யாவும் ஏமாற்றுவாரா இல்லை வெற்றியாளரைத் திருமணம் செய்து கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.