ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : புதன், 22 நவம்பர் 2017 (22:22 IST)

கல்யாண விவகாரம் - திரிஷாவுக்கு புரபோஸ் செய்த ஆர்யா

தன்னைக் கிண்டலடித்த திரிஷாவை நடிகை ஆர்யா மறைமுகமாக புரபோஸ் செய்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கையில் எடுத்துள்ளனர்.


 
நடிகர் ஆர்யா சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், திருமணத்திற்கு தான் பெண் தேடிக் கொண்டிருப்பதாகவும், விருப்பம் இருப்பர்கள் இதில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறி ஒரு தொலைப்பேசி எண்ணையும் கூறியிருந்தார்.
 
இதைக்கண்ட பலரும் அவரை கிண்டலடித்து கருத்து தெரிவித்தனர். நடிகர் திரிஷா இட்ட பதில் ‘ இந்து புது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால், இதைக்கண்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை’ எனக் கூறியிருந்தார்.
 
அதற்கு பதில் டிவிட் போட்ட ஆர்யா, என்னை நீ எப்போதும் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. அப்படி இருந்திருந்தால் நான் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன்’ எனக் கூறி மறைமுகமாக புரபோஸ் செய்தார்.
 
ஏற்கனவே, அமலாபாலிடம் ‘உனக்காக தான் சேமித்துக் கொண்டிருக்கிறேன். காதல் செய் அமலா’ என்று கூறி புரபோஸ் செய்தார் ஆர்யா. அதைக்கண்ட அமலாபால் ‘கிண்டல்  செய்தது போதும்’ எனக் கூறிவிட்டு எஸ்கேப் ஆனது குறிப்பிடத்தக்கது.