தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை

falls
Last Modified ஞாயிறு, 10 ஜூன் 2018 (13:57 IST)
பருவமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் பருவ மழை தொடங்கிவிட்டதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது.
 
கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த அருவிகளில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் மழையின் தாக்கம் சற்று குறைந்ததால் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மெயின் அருவியில் வெள்ளம் நீடிப்பதால் 3வது நாளாக அங்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ள சுற்றுலா பயணிகள் அங்கிருக்கும் நிலவரம் அறிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :