வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 15 மே 2018 (18:15 IST)

150 படங்களை நிராகரித்த அதிதி பாலன்!

அருவி படத்தை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. அதே போல அந்த படத்தின் நாயகியையும் மறக்க முடியாது. படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன. 
 
இந்த படம் வெளியாகி ஆறு மாதங்கள் ஆகியும் அடுத்து படம் எதையும் ஒப்புக்கொள்ளமால் இருக்கிறார் அதிதி பாலன். ஆனால், இவரோ இந்த ஆறு மாதங்களில் சுமார் 150 படங்களை நிராகரித்து உள்ளார். 
 
இது குறித்து அதிதி என்ன கூறுகிறார் என அவரது தரப்பு கூறியுள்ளதாவது, அருவி மூலம் தனக்கு கிடைத்த நல்ல பெயரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எனவே கதை கேட்கும்போதே மிகுந்த கவனமாக கேட்கிறேன்.
 
வித்தியாசமான, அதே நேரத்தில் தனக்கு நடிக்க முக்கியத்துவம் உள்ள கதைகளில்தான் நடிப்பேன். இரண்டு ஆண்டுகள் சும்மாவே இருந்தாலும் பரவாயில்லை. பத்தோடு பதினொன்றாக ஒரு படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம்.