‘அருவி’ இயக்குநரைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்

CM| Last Updated: புதன், 30 மே 2018 (20:26 IST)
‘அருவி’ இயக்குநரைப் பாராட்டி ட்வீட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்.கடந்த வருட இறுதியில் வெளியான படம் ‘அருவி’. அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கிய இந்தப் படத்தில், அதிதி பாலன் பிரதான வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் திரைக்கதையும், அதிதி பாலன் நடிப்பும் அனைவரும் கொண்டாடும் வகையில் இருந்தது.

இந்நிலையில், தன்னுடைய இரண்டாவது படத்துக்கான பூஜையைப் போட்டுள்ளார் அருண்பிரபு புருஷோத்தமன். 24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். நடிகர் - நடிகைகள் பற்றிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

“வாழ்த்துகள் மை டியர் அருண்பிரபு மற்றும் ராஜா அண்ணா. மற்றுமொரு சென்சேஷனல் படத்தை அருண்பிரபு கொடுக்கப் போகிறார் என உறுதியாகக் கூறுகிறேன். இந்தப் படத்துக்காகக் காத்திருக்கிறேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.


இதில் மேலும் படிக்கவும் :