செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Updated : செவ்வாய், 26 டிசம்பர் 2017 (12:30 IST)

‘அருவி’ அதிதி பாலனை ஓவர்டேக் செய்த சாய் பல்லவி?

‘அருவி’ அதிதி பாலனை சூர்யா ஜோடியாக நடிக்கவைக்க முயற்சி செய்தும், சாய் பல்லவிக்கே அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
சமீபத்தில் வெளியாகி எல்லோருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது ‘அருவி’. இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த அதிதி பாலனுக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. 500 பெண்களை ஆடிஷன் செய்ததில்  தேர்வானவர் அதிதி பாலன்.
 
இவரை, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கவைக்க தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்  விரும்பியிருக்கிறது. ஆனால், சூர்யாவின் பலமான ஆதரவால் சாய் பல்லவிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
 
விஜய் இயக்கத்தில் ‘கரு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கும் சாய் பல்லவி, பாலாஜி மோகன் இயக்கத்தில்  தனுஷ் ஜோடியாக ‘மாரி 2’ படத்தில் நடிக்கிறார்.