1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2017 (17:54 IST)

அருவி படத்தை பாராட்டிய நட்சத்திர நடிகர்; மகிழ்ச்சியில் அதிதி பாலன்

அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் நடித்துள்ள அருவி படம் ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல பாராட்டை பெற்றுள்ளது. அருவி படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை வெளிச்சம் போட்டு  காட்டினர். 
தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை அதிதி பாலன் சந்தோஷத்தை தாங்க முடியவில்லை என் கூறியுள்ளார். ஹீரோயினுக்கு  முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து வரும் நயன்தாரா மற்றும் சமந்தா, ஸ்ருதி ஹாஸன் என்று பெரிய  ஹீரோயின்கள் நடிக்க மறுக்க அருண் பிரபு தன்னை போன்றே புதுமுகங்களை தேர்வு செய்து அருவி படத்தை எடுத்துள்ளார்.
 
திரையுலகில் நல்ல படங்களை பாராட்ட தவறாதவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இப்படிதான் அருவி படத்தை பார்த்த  ரஜினிகாந்த் அருண் பிரபுவை அழைத்து பாராட்டியுள்ளார். இந்த பாராட்டு அவருக்கு மேலும் ஊக்கம் அளித்துள்ளது.
 
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் பாராட்டியதால் மகிழ்ச்சியை தாங்க முடியவில்லை என்று அதிதி அருவி பாலன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் ஷங்கர் ஒரு படத்தை பாராட்டுகிறார் என்றால் அது அந்த படத்திற்கு பெரிய பிளஸ். அருவி பாராட்டு  அருவிக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு பிரபலங்கள் பலரும் அருண் பிரபுவை பாராட்டி வருகின்றனர்.