செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 20 டிசம்பர் 2017 (11:30 IST)

என்னை கொன்றாலும் நான் அதை கொண்டாடுவேன்; லட்சுமி ராமகிருஷ்ணன்

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் டிவிட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கு தோன்றியதை மிகவும் தைரியமாக பேசக்கூடியவர் நடிகை இலட்சுமி ராமகிருஷ்ணன். இயக்குநராகவும், நடிகையாகவும் சினிமாவில் தனி முத்திரை பதித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் இவர் நடத்திய ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியை  கிண்டலடித்து ‘அருவி’ என்ற படம் வெளியாகி சமீபத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைப் பார்த்து கோபமடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு நெட்டிசன்கள்  பலரும் கலாய்த்து பதில் ட்வீட் செய்து வந்தனர்.
 
இந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் மீண்டும் தன்னுடைய டிவிட்டரில் வித்தியாசமான ஒரு புகைப்படம் ஒன்றை  வெளியிட்டுள்ளார். அந்தப் படத்தில் நெற்றியில் காசு, கழுத்தில் மாலையோடு பிணத்தை போல வேடம் அணிந்திருக்கிறார். அந்தப் பதிவில், நீங்கள் என்னை கொன்றாலும் நான் அதை கொண்டாடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.