1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2017 (21:53 IST)

'அருவி’யால் வருத்தப்பட்ட தயாரிப்பாளர்

‘அருவி’ படத்தைத் தயாரித்துள்ள எஸ்.ஆர்.பிரபு, வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.


 
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘அருவி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரித்துள்ளனர். அதிதி பாலன், முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்  பல உலகத் திரைப்பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது.
 
இந்தப் படத்தில், ஒரு முன்னணி நடிகரைப் பற்றி காமெடியான வசனம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனால், அந்த நடிகரின் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். அத்துடன், லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய ரியாலிட்டி ஷோவை கலாய்த்தும் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதால், தான் வருத்தம் அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், இதற்கு வருத்தம் தெரிவித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்வீட் செய்துள்ளார். “அருவி - இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என ட்வீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.