1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (12:34 IST)

Man-னும் Maggi-யும் 2 நிமிஷம் தான்… ரெஜினாவின் Adult Joke!!

ஆண்களையும் மேகி நூலுல்ஸும் 2 நிமிடங்களில் என நடிகை ரெஜினா அடல்ட் ஜோக் அடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நடிகைகள் நிவேதா தாமஸ் மற்றும் ரெஜினா இருவரும் இணைந்து நடித்துள்ள படம் சாகினி டாகினி. தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் நாளை வெளியாகவுள நிலையில் ரெஜினாவின் ஜோக் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் ப்ரமோஷனின் பங்காக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது நடிகை ரெஜினா, நான் ஒரு அடல்ட் ஜோக் சொல்றேன் என கூறிவிட்டு, "ஆண்களும் மேகியும் ஒரே மாதிரியானவர்கள், ஏனென்றால் இரண்டு நிமிடங்களில் இரண்டும் முடிந்துவிடும்." என கூறியுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.