லிங்குசாமி கதைக்கு ஓகே சொன்ன ஹீரோ – விரைவில் உருவாகிறது புதுக் கூட்டணி!

Last Modified வியாழன், 19 நவம்பர் 2020 (15:58 IST)

இயக்குனர் லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் அருண் விஜய் நடிக்க உள்ளாராம்.

நடிகர் அருண் விஜய்யின் தடம் படத்தின் வெற்றி அவர் மீது தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து அவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் மாபியா திரைப்படம் வெளியான நிலையில் நீண்டகாலமாக பாக்ஸர் என்ற திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது. அதே போல நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள், அறிவழகன் இயக்கத்தில் பார்டர் மற்றும் தனது மாமா ஹரி இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் இப்போது புதிதாக லிங்குசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியுள்ளனர். அஞ்சான் மற்றும் சண்டக்கோழி ஆகிய படங்களின் தோல்விக்கு பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த லிங்குசாமி இந்த கதையின் மூலம் மீண்டும் பீல்டுக்கு வரவேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளாராம்.இதில் மேலும் படிக்கவும் :