அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்… எல்லா நடிகரும் அந்த கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கணுமாம்!

Last Modified வெள்ளி, 20 நவம்பர் 2020 (19:06 IST)

அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் எல்லோருமே அய்யப்பன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது.

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதே நேரத்தில் தமிழ் ரீமேக் பற்றி முன்னரே அறிவிப்பு வெளியான போதும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்குக் காரணம் கதை கேட்கும் எல்லா கதாநாயகர்களும் பிஜு மேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :