1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (20:00 IST)

சாலையோர கடை வைத்திருந்த பெண்ணை பாராட்டிய அருண்விஜய்!

பிரபல நடிகர் அருண்விஜய் சாலையோர கடை வைத்திருக்கும் பெண்ணை பாராட்டி அவரது அன்பை பாராட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்புக்காக நடிகர் அருண்விஜய் காரில் சென்று கொண்டிருந்த போது சாலையோர கடை ஒன்றினை பார்த்ததும் சாப்பிடுவதற்காக இறங்கினார். 
 
அந்த கடையை நடத்தி வரும் பெண் ஒருவர் அருண்விஜய்க்கு அன்புடன் பரிமாறியதை அடுத்து என்னுடைய அம்மா கையில் சாப்பிட்டதை போன்ற இருக்கிறது என்று நெகழ்ச்சியுடன் அருண்விஜய் கொடுத்துள்ளார் 
 
மேலும் அந்த சாலையோர பெண்மணியின் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து கூறியதாவது:  ரோட்டுக் கடையில் உணவருந்திய போது..!! இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன்.. இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது.. என்று கூறியுள்ளார்.