1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (11:21 IST)

ஹரி படத்தில் நடிக்கும் இயக்குனர் கங்கை அமரன்… படக்குழு வெளியிட்ட புகைப்படம்!

இயக்குனர் ஹரி இப்போது அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

நீண்டநாள் கழித்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் அவரது மைத்துனரும்,நடிகருமான  அருண்விஜய் ஒரு ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படம் அருண்விஜய்க்கு 33வது படம். அதேபோல் ஹரிக்கு இந்த படம் 16 வது படமாகும்.  இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும், ராதிகா, பிரகாஷ்ராஜ், புகழ், அம்மு அபிராமி, ஜெயபாலன், உள்பட பலர் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடந்து வருகிறது. இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கும் நிலையில் இப்போது இயக்குனர் கங்கை அமரனும் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படத்தை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.