ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (16:17 IST)

ஹரி படத்தின் படப்பிடிப்பில் காயமான அருண் விஜய்!

நடிகர் அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

நீண்டநாள் கழித்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் அவரது மைத்துனரும்,நடிகருமான  அருண்விஜய் ஒரு ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படம் அருண்விஜய்க்கு 33வது படம். அதேபோல் ஹரிக்கு இந்த படம் 16 வது படமாகும்.  இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும், ராதிகா, பிரகாஷ்ராஜ், புகழ், அம்மு அபிராமி, ஜெயபாலன், உள்பட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வரும் நிலையில் படத்தின் கதாநாயகன் அருண் விஜய் காயமடைந்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.