செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (20:50 IST)

நயன்தாரா இயக்குநரின் படம் பற்றிய முக்கியத் தகவல்

நயன்தாரா நடிக்கவுள்ள படத்தின் இயக்குநர் சர்ஜுன் இயக்கிய முதல் படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கியவர் சர்ஜுன். பாலியல் சார்ந்து இந்த இரண்டு குறும்படங்களும் எடுக்கப்பட்டதால், இவை பரவலான கவனத்தைப் பெற்றன. இவர் இயக்கியுள்ள முதல் படம் ‘எச்சரிக்கை : இது மனிதர்கள் நடமாடும் இடம்’.
 
சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார், ‘ஆடுகளம்’ கிஷோர், யோகிபாபு ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தனஞ்ஜெயன் வாங்கியுள்ளார். அதிக டிஜிட்டல் கட்டணத்தை எதிர்த்து மார்ச் 1ஆம் தேதி முதல் தென்னிந்தியத் திரையுலகம் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறது. அது முடிந்ததும் உடனடியாக  இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.