லட்சுமி மா குறும்பட இயக்குநர் படத்தில் நயன்தாரா

Nayanthara
Last Updated: திங்கள், 5 பிப்ரவரி 2018 (22:20 IST)
லட்சுமி, மா ஆகிய குறும்படங்களை இயக்கிய இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.

 
லட்சுமி என்ற குறும்படம் வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதை சர்ஜூன் என்பவர் இயக்கினார். சில நாட்களுக்கு முன் இவரது இயக்கத்தில் மா என்ற குறும்படம் வெளியானது.
 
இந்த மா குறும்படமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் லட்சுமி அளவுக்கு பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தவில்லை. இதன்மூலம் அனைவரின் கனவத்தை ஈர்த்தவர் இயக்குநர் சர்ஜூன்.
 
இந்நிலையில் இவர் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். அறம், குலேபகாவலி ஆகிய படங்களை தயாரித்த கே.ஜி.ஆர் ஸ்டூடியோ சர்ஜூன் இயக்கும் படத்தை தயாரிக்கவுள்ளது. 
 
இதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படம் திகில் பேய் படமாக உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :