செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (10:06 IST)

ப்ரோமோ நிகழ்ச்சியிலேயே பிரச்சனையா… அர்ஜுனால் கையைக் கடிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி குழு!

சின்னத்திரையில் புது நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ள சர்வைவர் நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்க உள்ளார்.

ஜி தொலைக்காட்சியில் தனித்தீவில் போட்டியாளர்களுக்கு பலவித கடுமையாக போட்டிகள் வைக்கப்பட்டு அதில் இறுதிவரை சமாளித்துப் போராடும் விதமாக சர்வைவர் என்ற நிகழ்ச்சி உருவாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க உள்ளார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்தான் தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான ப்ரோமோ நிகழ்ச்சி படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதில் ஒரு கார் சம்மந்தப்பட்ட காட்சி படமாக்கப்பட்ட போது சம்மந்தப்பட்ட கார் பிரபலமான விலை உயர்ந்த கார் பயன்படுத்தப் படவில்லை என்பதால் புதுக்கார் வேண்டும் என்று கேட்டு அதற்காக மிகப்பெரிய தொகையை செலவு வைத்துள்ளாராம்.