1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (18:40 IST)

விஜய் ’’பீஸ்ட்’’ .... சிம்பு படத்துடன் தொடர்பு..?

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய்யின் பீஸ்ட் படத்திற்கும் நெல்சன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக கூறப்பட்ட வேட்டை மன்னன் படத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளதாக  ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

நெல்சன் திலீப்குமாரின் முதல்படம் சிம்புவுடன் வேட்டை மன்னன் என்ற பெயரில் உருவாவதாக இருந்தது. இதன் போஸ்டர் சிம்பு ஒரு துப்பாக்கியுடன் இருப்பது போல் இருந்தது. சமீபத்தில் விஜய் பிறந்தநாள் அன்று வெளியான பீஸ்ட் பட போஸ்டரிலும் இதேபோல்  இருந்ததால் இரு நடிகர்களின் படத்திற்கும் தொடர்பு உள்ளதா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.