திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (21:18 IST)

சித்தார்த்தை அடுத்து ஹாலிவுட் படத்தில் இணையும் அரவிந்தசாமி!

ஹாலிவுட்டில் தயாரான அனிமேஷன் திரைப்படமான  'தி லயன் கிங்' என்ற திரைப்படம் ஜூலை 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் தமிழ் உள்பட பல முக்கிய இந்திய மொழிகளிலும் அதே தேதியில் ரிலீஸ் ஆகவுள்ளது
 
இதனையடுத்து இந்த படத்தின் தமிழ் டப்பிங் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஹீரோவான சிம்பா என்ற சிங்கத்திற்கு நடிகர் சித்தார்த் பின்னணி குரல் கொடுத்துள்ளதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் செய்தி வெளிவந்தது. இதனையடுத்து இந்த படத்தின் ஸ்கார் என்ற கேரக்டருக்கு நடிகர் அரவிந்தசாமி குரல் கொடுத்துள்ளார். இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். சிம்பா சிங்கத்தின் மாமா சிங்கமான இந்த ஸ்கார் சிங்கம் படத்தின் கதையில் முக்கிய அங்கம் வகித்துள்ளது என்பதும் இதன் ஒரிஜினல் வடிவமான ஆங்கிலத்திற்கு சிவட்டல் எஜியோஃபர் என்பவர் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படம் உலக அளவில் மிகப்பெரிய வியாபாரம் செய்துள்ளது. முதல் நாள் வசூலே உலகம் முழுவதும் சுமார் 150 முதல் 170 அமெரிக்க டாலர்கள் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது