’எப்போதும் அடிக்கிறார் ..படுக்கையில் படுக்க சொல்கிறார் ’ - நடிகர் மீது நடிகை புகார்

sidharth
Last Modified திங்கள், 3 ஜூன் 2019 (20:14 IST)
நடிகை சுபுஹி ஷோசியும், நடிகர் சித்தார்த்தும் சில வருடங்களுக்கு முன்னர் தீவிரமாகக் காதலித்து வந்தனர். ஆனால்  கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் அண்மையில் பிரிந்துசென்றனர். இந்நிலையில் தற்போது தனது காதலர் சித்தார்த் மீது சுபுஹி ஜோஷி பாலியல் புகார் கூறியுள்ளதௌ பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சித்தார்த், காமெடி சர்க்கஸ், தி கபில் சர்மா போன்ற ஃபேமசான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்தி வழங்கி பிரபலமானார்.
 
நடிகை சுபாஹி முதலில், தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து நடிகையானவர்தான். இருவரும் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் சில வருடங்களுக்கு முன் சித்தார்த்தும் , சுபாஹியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். 
 
ஆனால் அண்மையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து சென்றனர். இதனையடுத்து சித்தார்த் மீது சுபுஹி புகார் தெரிவித்துள்ளார். அதில் சித்தார் என்னை எப்போதும் அடித்து துன்புறுத்துகிறார்...படுக்கையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று என்னை வற்புறுத்துகிறார்.. அதனால் அவரிடமிருந்து பிரிகிறேன் என்று கூறினார். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இதுகுறித்து சித்தார்த் கூறியதாவது : திருமணத்தில் சுபுஹிக்குப் பிடிக்கம் இல்லை அதனால் நாங்கள் நிச்சயத்துக்குப் பின்னர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :