வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 4 மே 2019 (14:20 IST)

அமெரிக்க அதிபர் ட்ரம்பை நேர்காணல் செய்யப்போகும் தமிழ் நடிகர்? யார் தெரியுமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்பை பிரபல தமிழ் நடிகர் சித்தார்த் நேர்காணல் செய்யவேண்டும் என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


 
தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து தெலுங்கு, இந்தி என பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சித்தார்த் சினிமா மட்டுமின்றி சமூக பிரச்னைகள் மற்றும் அரசியல் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். மேலும் பாஜக கட்சியின் தீவிர எதிரியாகவே மாறி வருகிறார். 


 
அந்தவகையில் தற்போது அவர் செய்த ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.  நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் "டொனால்ட் ட்ரம்ப் அவர்களே, நீங்கள் தற்போது தேர்தலுக்கு தயாராகி வருவதால் எனக்கு நீங்கள் ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள், நீங்கள் எப்படி தூங்குவீர்கள், உங்களுடைய அழகின் ரகசியம் என்ன என்பது குறித்து நிறைய கேள்விகள் என்னிடம் இருக்கிறது. என்னிடம் இந்திய பாஸ்ப்போர்ட் இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.


 
சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் இச்சமயத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பிரதமர் மோடியை வைத்து நேர்காணல் ஒன்றை எடுத்தார். இது பல தரப்புகளில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அந்த நேர்காணலை கலாய்க்கும் விதமாகதான் சித்தார்த் இப்படி பதிவிட்டுள்ளார் என ட்விட்டர் வாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.