செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2020 (08:33 IST)

பொண்ணா பொறந்தால் இதை கடந்து தான் போகணும் - கதறிய நிஷாவின் வீடியோ வைரல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான  கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஓரு சில படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் தனது முழு நேர வேலையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.  

தனது சொந்த அத்தை மகனை திருமணம் செய்துகொண்ட நிஷாவிற்கு ஒரு மகன் , ஒரு மகள் இருக்கின்றனர். அம்மா, அப்பா , தம்பி, அத்தை , மாமா கணவர் , குழந்தைகள் என ஒரு மகிழ்ச்சி நிறைந்த குடும்பத்தில் சந்தோஷமா வாழ்ந்து வரும் நிஷாவின் இந்த வளர்ச்சிக்கு அவரது குடும்பத்தினரின் ஆதரவு தான் முக்கிய பங்காக வகித்தது.

இந்நிலையில் தற்போது நிஷா தனது கல்யாண வீடியோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து , "வேற வழி இல்லாம என்னோட கல்யாண வீடியோவை பார்த்தேன். எப்போ பார்த்தாலும் அழுகை தான் வருது. பொண்ணா பொறந்தா இதெல்லாம் கடந்து தான் போகணும். என கூறி அவர் கல்யாணத்தில் தேம்பி தேம்பி அழும் வீடியோ வெளியிட அது இணையத்தில் செம வைரலாகிவிட்டது. இதோ அந்த வீடியோ...