வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2020 (11:09 IST)

நெருப்பு கொழுந்துவிட்டு எரிய பயத்தில் நடுங்கி ஃபயர்பீடா சாப்பிடும் அருண் விஜய் - வீடியோ!

சுந்தர் சி இயக்கத்தில் 1995ம் ஆம் ஆண்டில் வெளிவந்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். ஆனால் அந்த படம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அதையடுத்து வெளிவந்த பாண்டவர் பூமி படம் சூப்பர் ஹிட் அடித்து அவருக்கு நல்ல திருப்பு முனையாக அமைந்தது.

அதையடுத்து தொடர்ந்து பிளாப் அடித்ததால் அருண்விஜய் இருக்கும் இடமே தெரியாமல் பின்தங்கினார். பின்னர் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து அஜித்துக்கு நிகராக பாராட்டப்பட்டார். அந்த படம் நல்ல கம்பேக் கொடுத்தது. பின்னர் தடம், மாஃபியா என தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது 31 வது படமான ஜிந்தாபாத் என்ற புது படத்தில் அருண்விஜய் நடித்து வருகிறார். அறிவழகன் இயககும் இப்படத்தில் ரெஜினா மற்றும் ஸ்டெபி படேல் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங்கிற்கு இடையில் அருண் விஜய் ஃபயர் பீடா சாப்பிடும் வீடியோ ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.