திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2020 (11:31 IST)

வைரலாகும் ஸ்ரீதேவியின் குடும்ப புகைப்படம் - இதுவரை யாரும் பார்த்திருக்காமாட்டீங்க!

மறந்த நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது பாலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கியவர். அப்போதே லேடி சூப்பர் ஸ்டார் என இந்திய சினிமா ரசிகர்களால் அழைக்கப்பட்ட ஸ்ரீதேவி சினிமாவில் பல சாதனையை புரிந்துள்ளார். இவரது கணவர் போனி கபூர் பிரபல தயாரிப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜான்வி கபூர் , குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி பாலிவுட் சினிமாவின் இளம்  ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். குஷி வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் அப்பா போனி கபூர் நடிகர் அஜித்தின் வலிமை படத்தை இயக்கி வருகிறார். நட்சத்திர குடும்பம் என்பதால் ஒரு சிறிய விஷயம் என்றால் கூட தலைப்பு செய்தியாக பார்க்கப்படும்.

அந்தவகையில் தற்போது நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் அனைவரும் தமிழ்நாட்டு ஸ்டைலில் உடை அணிந்துள்ளது தான் ஹைலைட். ஸ்ரீ தேவி தன் மகள் ஜான்விக்கு எப்போதும் பாவாடை தாவணி அணியச்சொல்லி அழகு பார்ப்பாராம். அதை அப்போது உதாசீனப்படுத்திய ஜான்வி தற்போது அம்மாவின் மறைவிற்கு பிறகு அவரது ஆசையை தன் ஆசையாக மாற்றி விஷேஷ விழாக்களுக்கு  பாவாடை தாவணி அணிந்து கொள்கிறார் எனபது கூடுதல் தகவல்.