செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2020 (20:00 IST)

Rocking Performance... ஸ்ருதி ஹாசனின் திறமையை கண்டு வாய்பிளக்கும் ரசிகர்கள்!

உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.

சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார். காதல் முறிவுக்கு பின்னர் கேரியரில் அதீத கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'டீப் ப்ளூ' என்ற ஆங்கில பாடலை அற்புதமாக பாடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தென்பாண்டி சீமையிலே பாடலை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Link In bio for my you tube channel #subscribe

A post shared by @ shrutzhaasan on