வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 12 மார்ச் 2022 (15:28 IST)

மனைவியுடன் செம்ம போஸ் கொடுத்த இசைப்புயல் ரஹ்மான்!

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தன்னுடைய மனைவியோடு இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இப்போது தன் கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ளார். அதில் குறிப்பிடத்தகுந்த படங்களாக வெந்து தணிந்தது காடு, மாமன்னன், அயலான் ஆகிய படங்கள் உள்ளன. இவைத் தவிர இந்தியிலும் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அவ்வப்போது சமூகவலைதளங்களின் மூலமாக தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வரும் அரிதினும் அரிதாக இப்போது தன்னுடைய மனைவி சாய்ரா பானுவோடு இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்துக்கு கேப்ஷனாக ‘the art of living together’ என்று குறிப்பிட்டுள்ளார்.