1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2020 (17:19 IST)

அவர் தான் எங்களின் ராணி: ஜிவி பிரகாஷ் டுவீட்!

மறைந்த ஏஆர் ரகுமானின் தாயார் அவர்கள் தான் எங்களுடைய ராணி என்று நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் நெகழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் 
 
ஏஆர் ரகுமான் அவர்களின் தாயார் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் என்றும் அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர் என்பது தெரிந்ததே 
 
மறைந்த ரஹ்மான் அவர்களின் தாயாரின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் ஏஆர் ரகுமானின் தாயார் அவர்கள் ஜிவி பிரகாஷின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது 
 
அவர் தான் எங்களின் ராணி: ஜிவி பிரகாஷ் டுவீட்!
இதனை அடுத்து தனது பாட்டியின் மறைவு குறித்து டுவிட்டரில் நெகிழ்ச்சியான டுவிட் ஒன்றை ஜிவி பிரகாஷ் பதிவு செய்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் அவர்கள் ராணி போன்று இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து எங்கள் குடும்பத்தின் ராணி தான் அவர் என்று குறிப்பிட்டுள்ளார் 
 
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒட்டுமொத்த குடும்பமும் அவரது தாயாருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் சற்றுமுன் பதிவு செய்துள்ளார்