1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 28 டிசம்பர் 2020 (16:07 IST)

ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் மறைவு: முதல்வர், முக ஸ்டாலின் இரங்கல்!

பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் அவர்களின் தாயாரும் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பாட்டியுமான கரீமா பேகம் என்பவர் இன்று சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் ஏஆர் ரகுமானின் தாயார் மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில் கூறியதாவது: 
‘இசைத்துறையின் ஜாம்பவான் இசையமைப்பாளர் திரு.A.R.ரஹ்மான் அவர்களின் அன்புத்தாயார் திருமதி.கரீமாபேகம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். தாயாரின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் @arrahman அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்! என்று கூறியுள்ளார்.
 
முதல்வரை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் ஏஆர் ரகுமான் தாயார் மறைவு குறித்து கூறியதாவது: ‘இசைப்புயல் @arrahman அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! இசையமைப்பில் உச்சம் தொட்டு ஆஸ்கர் வரை உலகப் புகழினை பெற்றிடும் வகையில் ரகுமானை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் அம்மையார். இழப்பில் துயர் அடைந்திருக்கும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு ஆறுதல்! என்று குறிப்பிட்டுள்ளார்
 
முதல்வர் ஈபிஎஸ், முக ஸ்டாலின் ஆகியோர்களை அடுத்து மேலும் பல அரசியல் பிரபலங்களும் திரையுலக பிரபலங்களும் ஏஆர் ரகுமானின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது